5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தை தமிக அரசு செய்லபடுத்த எடப்பாடி அரசு முடிவு செய்த அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க அரசு அல்ல; பா.ஜ.க அரசு என்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அ.தி.மு.க ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது என ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.