பாஜகவுடன்  "ஸ்டாலின்"..! உண்மையை போட்டுடைத்த தமிழிசை..! 

திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் பேசிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஒருபக்கம் ராகுல், மறுபக்கம் சந்திரசேகரராவ், மூன்றாவது மோடியிடம் திமுக பேசிக் கொண்டிருக்கிறது என ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

இதற்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுடன் மறைமுகமாக தொடர்பில் உள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். அவர் தெரிவித்தது உண்மை தான். பாஜக உடன் கூட்டணி வைக்க தொடர்ந்து திமுக பாஜக உடன் தொடர்பில் உள்ளது என தெரிவித்தார் தமிழிசை 

இதற்கு முன்னதாக சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் சாடலினை சந்தித்ததால் பாஜகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் தமிழிசை தீர்க்கமாக தெரிவித்துள்ளார். மேலும் யாரோ ஒருவர் மூலமாக பாஜக உடன் தொடர்பில் இருக்கிறார்கள் திமுக என தமிழிசை சொன்னதற்கு, யார் அவர் ? என்ற கேள்வியை முன் வைத்தனர் செய்தியாளர்கள். அதற்கு தமிழிசை சிரித்தவாறே, யாரோ ஒருவர் மூலமாக பேசுவார்கள் என கிண்டலாக தெரிவித்தார் தமிழிசை