ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீடா என்கிற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதற்கு முன்னரே மத்திய வனத்துறை அலுவலகம் காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்தது. இதனால் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு முதல் பல்வேறு அமைப்புகள் சட்டரீதியாக  போராடி வருகின்றன. உச்சநீதிமன்றம் இதுவரை ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவருகிறது. 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் மத்திய அமைச்சர் தவே தீர்ப்புக்கு பிறகு எங்கள் நிலைபாடு அறிவிப்பேன் என்று கூறினார்.

தமிழக மத்திய அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீரும் என்று கூறி வருகின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் செயல்பாட்டில் மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை .

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய்ட அரசு இரட்டை வேடம் போடுகிறது. 

காரணம் ஒரு பக்கம் தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று கூறிவருகின்றனர். மறுபுறம் ஜல்லிக்கட்டு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் தெளிவான பதிலை தெரிவிக்க மறுக்கின்றனர். இன்று மத்திய அமைச்சர் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளது வேதனையளிக்கிறது 

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ரெட்டை  வேடம் போடும் நிலை உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.