stalin statement
தேசபக்தி என்பது ஏதோ கனக்கு மட்டும் குத்தகைக்கு விடப்பட்டது போலவும், மற்றவர்களை தேச விரோதிகள் போலவும் சித்தரிப்பதை எச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக்குறைவாக விமர்சித்திருக்கும் பாஜக . தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நாம் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம். மிரட்டும் தொனியில் பேசலாம். நம்மை யார் என்ன செய்ய முடியும்? என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருந்து எச்.ராஜா விடுபட முடியாமல் தவிப்பது தெரிகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேசபக்தி’ என்பதும், ‘இந்தியன்’ என்பதும் ஏதோ தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை ‘தேச விரோதிகள்’ என்றும், ‘இந்திய விரோதிகள்’ என்றும் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும், தேசபக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் எச்.ராஜா போன்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றுன் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரியார், சோனியா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் மீது அவதூறான கருத்துக்களைப் பேசும் எச்.ராஜா மீது பாஜக .வின் தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
