எங்களுக்குள் மாறுபட்ட கருத்துகள், கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், ஜெ., 'மாஸ் லீடர்' என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்த ஸ்டாலின் ஊடகங்கள் திட்டமிட்டு திமுகவை ஒழிக்க பிரச்சாரம் செய்த வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றக் கூட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் ஊராட்சி மன்றத்தைக் கூட்டி கூட்டம் நடத்திய அவர் நேற்று திருச்சி, மணப்பாறை அருகேயுள்ள சீகம்பட்டி, நவலுார் குட்டப்பட்டு கிராமங்களில் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் நடத்த, அ.தி.மு.க., அரசு முன்வரவில்லை. இதனால், தி.மு.க., சார்பில் கிராம சபைக் கூட்டம் நடத்தி, குறைகளை கேட்டு வருகிறோம் எனவும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், குறைகள் களையப்படும் என்றும் தெரிவித்தார்.
ஊடகங்கள் திட்டமிட்டு, தி.மு.க.,வை ஒழிக்க பிரசாரம் செய்து, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதை முறியடிக்கவே, கிராம சபைக் கூட்டங்களை கூட்டி வருகிறோம்.நான், 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்து வருகிறேன். தற்போதைய ஆட்சி போல், ஒரு கேடு கெட்ட ஆட்சியை பார்த்தது இல்லை. ஜெ.,யால் இந்த ஆட்சி ஓடிக் கொண்டுள்ளது. எங்களுக்குள் மாறுபட்ட கருத்துகள், கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், ஜெ., 'மாஸ் லீடர்' என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2019, 7:59 AM IST