திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு..!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவடங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு,மக்களிடம் நிறை குறை கேட்டு வருகிறார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசு அதிகாரத்தில் ஆளுநர்  ஈடுபடுவதாகவும் கூறி, ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம் கூட  நடத்தினர்

இந்நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் சட்டசபலை கூட்டதொடரில் திமுக  செயல் தலைவர்  ஸ்டாலின்  வெளிநடப்பு  செய்துள்ளார்.

அதாவது, ஆளுநர் மாளிகை தன் அதிகாரம் குறித்து சட்ட வல்லுனர்கள் கருத்தை செய்தி வெளியீடாக வெளியிட்டது. அதில் தலைமை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு தான் ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே முதல்வருக்கு தெரியாமல் ஆலோசனையும் இந்த ஆய்வுகளும் நடந்தததா, அல்லது தெரிந்து தான் நடத்தப்பட்டதா என முதல்வரிடம் விளக்கம் கேட்டதாகவும்ஆனால் முதல்வர் பதிலளிக்காததால் திமுக வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்காமல் அமைதியாக இருப்பதாகவும் ஆளுனருக்கு கட்டுப்பட்டு மத்திய அரசுக்கு அடிமையாக அரசு நடைபெற்று வருகிறது என்றும், மாநில உரிமை சுயாட்சி குந்தகம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தில் இரட்டை அரசு நடைபெற்று வருவதாகவும் ஆளுனர் எஜமானாகவும் எடப்பாடி அடிமையாக இருக்கும் அரசாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் முதல்வர் தலைமையில் ஒரு ஆட்சி, ஆளுநர் தலைமையில் ஒரு ஆட்சி என இரட்டை ஆட்சி நடைபெற்று வருவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.