மதக் கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை இரண்டாக்கும் பாஜக..! மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு அறிவிப்பு- ஸ்டாலின்

 ஆத்திரம் ஏற்பட்டு, கோபம் ஏற்பட்டு, எரிச்சலில் நம்மை பழி வாங்குவதற்காக இன்றைக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை. வருமானவரித்துறை என்று நம்மை எல்லாம் மிரட்டி பார்க்கிறார்கள். இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கிவிடுகிற கட்சி தி.மு.க. அல்ல என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Stalin said that BJP is trying to divide the country by creating religious riots

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் - தி.மு.க.விற்கும் எப்பொழுதும் நட்பு உண்டு. தேர்தலுக்காக நட்பு மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் நம்பு மட்டுமல்ல, கொள்கை நட்பு. அதுதான் முக்கியம். எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி. இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறபோதும் தொடர்கிறது. தொடர்கிறது என்றால், இது என்றைக்கும் தொடரும். உறுதியாக சொல்கிறேன். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாகத் தொடரும் என்பதை இந்த திருமண விழா பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

Stalin said that BJP is trying to divide the country by creating religious riots

ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னால், ஏதோ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலாக மட்டும் நாம் நினைத்து விடக்கூடாது. அதையும் தாண்டி சொல்கிறேன், ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறும் தேர்தலாகக் கூட நீங்கள் நினைத்து விடக்கூடாது. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் - ஒரு பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும்  பி.ஜே.பி. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் 'இந்தியா' கூட்டணி அமைந்திருக்கிறது.

பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் அவர்கள் தலைமையில் கூடி எதிர்க்கட்சியில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பீகார் மாநிலத்தில் நடத்தினோம். அதற்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம். அதில்தான் இந்தியா என்ற பெயரைத் தேர்வு செய்து நம் கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம். அடுத்த வருகின்ற ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவுகளை எல்லாம் நாம் அறிவிக்க இருக்கிறோம். நானும் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன்.

Stalin said that BJP is trying to divide the country by creating religious riots
எனவே தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ அதே போல் ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக ஒன்றிய அரசு அமைவதற்கு அது நல்லரசாக அமைவதற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தை இங்கே தொடங்கி வைக்க வேண்டும் என்று நம்முடைய முத்தரசன் அவர்கள் குறிப்பிட்டார்கள். தொடங்கத்தான் வந்திருக்கிறேன். நான் எப்போதுமே தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில்தான் தொடங்குவேன். இப்போதும் அதே உணர்வோடுதான் இந்த மேடையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

தேர்தலுக்கு முன்னால் என்ன சொன்னார்கள், வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி அதை இந்தியாவிற்குக் கொண்டு வந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்தார். நான் பல கூட்டங்களில் கேட்டேன். நான் மட்டுமல்ல, எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது தந்தார்களா? 15 ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது தந்தார்களா? இதுவரையில் இல்லை.

Stalin said that BJP is trying to divide the country by creating religious riots

இதைவிட கொடுமை. மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை இரண்டாக்கும் சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கலந்து பேசி இதற்கான முடிவெடுக்க வேண்டும். இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும், தேர்தலில் நல்ல பாடம்  புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா தலைமையில்  என்ற ஒரு கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம். இதைப் பிரதமர் மோடியால் தாங்க முடியவில்லை. அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் - ஒரு கூட்டணி அமைத்து ஸ்ட்ராங்காக அந்தக் கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறோமோ. அந்தக் கூட்டணி தொடர்ந்து தமிழ்நாட்டில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனவே அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் இந்தக் கூட்டணியும் அந்த இந்தியா கூட்டணியில் சேர்ந்திருக்கிறது. 

இந்தியா என்ற கூட்டணி உருவாகுவதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்தக் கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஒரு ஆத்திரம் இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் எங்கு சென்றாலும், அது சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. கொடியேற்று விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது பல மாநிலங்களுக்குச் சென்று அங்கு நடத்தும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி - எங்கு சென்றாலும் இன்றைக்கு நாம் அமைத்திருக்கும் கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார், கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

Stalin said that BJP is trying to divide the country by creating religious riots

அதிலும் தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய அணியைப் பற்றி, குறிப்பாக தி.மு.க.வை பற்றி இன்றைக்கு அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்குக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். பேசுகிறார்? தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாம். ஒன்பது வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். "எனவே அந்த ஊழலை ஒழித்தே தீருவேன். இந்தியாவில் இருக்கும் ஊழலைத் ஒழித்தே தீருவேன்" என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து அடக்கத்தோடு கேட்க விரும்புவது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. ஆதாரங்களோடு எடுத்து வெளியிடுகிறார்களே. 

 எதையும் ஆதாரத்தோடுதான் பேச வேண்டும். அதற்காக நான் புள்ளி விவரத்தை எல்லாம் குறித்து வந்திருக்கிறேன். கையில் எடுத்துவிட்டுத்தான் ஊழலைப் பற்றி பேசுவதற்கு பி.ஜே.பி.க்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்கிறேன். சி.ஏ.ஜி. அறிக்கை இன்றைக்கு என்ன சொல்கிறது. சி.ஏ.ஜி. அறிக்கை என்பது ஒரு ஆய்வு அறிக்கை. மத்திய அரசிற்குக் கட்டுப்பட்டு இருக்கும் அந்த அமைப்பு. அது ஒவ்வொரு வருடமும் அன்றைக்கு அரசின் நிலையைப் பற்றி, அந்த அரசு செய்திருக்கும் செலவுகளை பற்றி ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் சி.ஏ.ஜி.யின் வேலை.

அந்த சி.ஏ.ஜி. என்ன சொல்கிறது என்றால், ஒன்றியத்தில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி - ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்ச லாவண்யம் பெருத்துப் போன ஆட்சி என்று சொல்கிறது. நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சி சொல்லவில்லை. நாங்கள் சொல்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் ஏற்கனவே சொல்லிக் கொண்டிருக்கிறோம் அது வேறு. இப்போது யார் சொல்கிறார்? சி.ஏ.ஜி. சொல்கிறது. மத்திய கணக்குத் துறையின் அறிக்கை சொல்கிறது. ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒன்று, இரண்டு அல்ல ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசுகிறதே என்று ஆத்திரம் ஏற்பட்டு, கோபம் ஏற்பட்டு, எரிச்சலில் நம்மை பழி வாங்குவதற்காக இன்றைக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை. வருமானவரித்துறை என்று நம்மை எல்லாம் மிரட்டி பார்க்கிறார்கள். இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கிவிடுகிற கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாம் அஞ்சி விடமாட்டோம். எமர்ஜென்சியையே பார்த்தோம். எமர்ஜென்சியையே எதிர்த்தோம். எனவே எதைப் பற்றியும் தி.மு.க. கவலைப்படத் தயாராக இல்லை. அதேபோல் இந்தியா என்று அமைப்பில் இருக்கும் கூட்டணியும் இதைப் பற்றி கவலைப்படவும், சிந்திக்கவும் தயாராக இல்லை.

Stalin said that BJP is trying to divide the country by creating religious riots

எனவே தங்களுடைய லஞ்ச லாவண்யங்களை கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இனி மூடி மறைப்பதற்காக, இன்றைக்கு மதவாதத்தைக் கையில் எடுத்துக் வரும் காலகட்டங்களில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios