Asianet News TamilAsianet News Tamil

வடநாட்டு தொழிலாளர்களுக்கு மட்டும் ஓடோடி உதவிய மு.க.ஸ்டாலின் ... பாவப்பட்ட தமிழர்கள்..!

எம்.எல்.ஏக்கள் - எம்.பி.,க்கள் கொடுக்கும் நிதிகளை மட்டும் அறிவித்து களப்பணியாற்றாமல் முடங்கி இருக்கிறார்கள் திமுகவினர். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள். அமைச்சர்கள் மட்டுமே களத்தில் பணியாற்றி வருகிறார்கள். 

Stalin's help workers only in the North ... Sinhalese Tamils
Author
Tamil Nadu, First Published Mar 28, 2020, 5:13 PM IST

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த  கட்டிட கூலி தொழிலாளர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், மதுரப்பாக்கம் ஊராட்சியில் கட்டிடப் பணி செய்து வந்தார்கள். தற்போது "கொரோனா வைரஸ்" தொற்று அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பணியாற்றி வந்த கட்டிடத்தின் உரிமையாளர் அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் தவிக்க விட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. Stalin's help workers only in the North ... Sinhalese Tamils

அத்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், உண்ண உணவின்றி பசியோடு இருப்பதை மேற்குவங்க முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர். உடனடியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தமிழகத்தில் தவிக்கும் மேற்குவங்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களுக்கு உதவிடும் படி கேட்டுக்கொண்டுள்ளார். 

உடனடியாக மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசனை தொடர்புகொண்டு மதுரப்பாக்கத்தில் பரிதவிக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு உதவிடும் படி ஆணையிட்டார்.Stalin's help workers only in the North ... Sinhalese Tamils

அதன்படி மதுரப்பாக்கத்தில் பரிதவித்து வரும் மேற்கு வங்கத்தை சார்ந்த கட்டிடத் தொழிலாளர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கும் சமைத்து சாப்பிட தேவையான அரிசி, கோதுமை, காய்கறி மற்றும் அனைத்து அத்தியாவசிய  பொருட்களையும்  காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் அந்த பகுதியின் ஊராட்சி கழகச் செயலாளரும், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மு.வேல்முருகன், அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி வருகிறார்.

தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் சார்பில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டெரிக் ஓ.ப்ரெய்ன், இதுகுறித்து மு.க.ஸ்டாலினை டூவிட்டரில் பாராட்டி நன்றி கூறியுள்ளார். தமிழக சட்டமன்றம் கூட செல்லாமல் வீட்டுக்குள் திமுக எம்.பி களும், எம்.எல்.ஏக்களும் முடங்கிக் கிடக்கிறார்கள். தமிழகத்தில் எங்கும் சென்று தமிழர்களுக்கு உதவாத திமுகவினர் மேற்கு வங்கத்தை சேர்ந்த வடநாட்டவர்களுக்கு மட்டும் உதவி செய்துள்ளது தமிழக மக்களிடத்தில் திமுக வேற்றுமை பார்ப்பத்தை உணர்த்தி உள்ளது. 

 

அனைத்து கட்சி கூட்டத்தைக்கூட அவர் வீடியோ கான்பரசிங்கில் மட்டுமே நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் எம்.எல்.ஏக்கள் - எம்.பி.,க்கள் கொடுக்கும் நிதிகளை மட்டும் அறிவித்து களப்பணியாற்றாமல் முடங்கி இருக்கிறார்கள் திமுகவினர். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள். அமைச்சர்கள் மட்டுமே களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இது குறித்து நேற்று எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியுஇல் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கிறது. மற்ற கட்சிகள் ஒதுங்கிக் கொண்டன எவ வருத்தம் தெரிவித்து இருந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios