தலைமை கொடுக்கும் பணத்தை ஆட்டைய போட்ட நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வைத்த செம்ம செக்... புலம்பிக் கொட்டும் தி.மு.க. புள்ளிகள்..!
துட்டு இருக்கிற ஆளுக்குதான்யா சீட்டு! என்று இரண்டு பெரிய கழகங்களும் முடிவு செய்துவிட்டன. இதனால் தொகுதிக்குள் ‘கேடி’ என்று கலாய்ப்பு பட்டம் வாங்கி வைத்திருந்தாலும் பரவாயில்லை, கோடிகள் கையில் இருந்தால் தில்லாக சீட் கேட்கலாம் என்று நினைக்கும் இரு கட்சிப் பேர்வழிகள் பலரும் ‘தல என்னைய வேட்பாளராக்குங்க. ச்சும்மா அள்ளிக்கினு வர்றேன் வாக்குகளை.’ என்று சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தாங்கள் நிற்கும் இருபதில் ஒவ்வொரு தொகுதியிலும் செலவிட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜஸ்ட் 40 கோடி. இதில் வேட்பாளர் பாதி தொகையை தரவேண்டும், மீதி இருபது கோடியை கட்சி தரும்.
பொதுவாக இந்தப் ஹெவி வெயிட் பணமானது அந்த தொகுதியின் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டு, அவரை கணக்குப் பார்த்து செலவு செய்ய சொல்வார்கள். ஆனால் பல நிர்வாகிகள் அதில் பெரும் பங்கை ஆ! போட்டுவிட்டு, ஆஹோ ஓஹோ எனுமளவுக்கு வாழ்க்கையில் வசதி வாய்ப்புடன் செட்டிலாகிவிடுவார்கள்.
இந்த பஞ்சாயத்துக்கு இந்த முறை ஆப்பு வைக்க முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின். அதனால் இந்த முறை ஒவ்வொரு தொகுதிக்குமான மெகா சைஸ், கோடிகள் அடங்கிய சூட்கேஸை மூன்றாவதாக ஒரு நபரிடம் தரப்போகிறாராம். அவர் மூலமாகதான் தேர்தல் ‘வேலைகளுக்கு’ செலவு செய்யப்படும்! அந்த நபரிடம் தேர்தல் பொறுப்பாளர்கள் நிதி கேட்டு பிரச்னை செய்ய க்கூடாது! என்று தலைமையிலிருந்து கறார் சர்குலர் வந்துவிட்டதாம். இதைக்கேட்டு....”ஆஹா வடை போச்சே! அதுவும் சாதாரண வடையா? வைர வடையாச்சே!” என்று கண்ணீர் விடாத குறையாக புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம் நிர்வாகிகள். அவ்வ்வ்!............