காவிரி மருத்துவமனை  தீவிர சிகிச்சையில் இருந்து வரும்   திமுக தலைவர் கருணாநிதி  நேற்று முன் தினம் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டார்.  மூன்றாவது நாளன இன்று  வெளியிட்ட அறிக்கையில்,  உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு பிறகு உடல்நிலை சீராக உள்ளது என கூறியுள்ளனர். 

உடல்நிலையில் பின்னடைவு என அறிக்கையில் குருப்பிட்டிருந்தாலும், மருத்துவ உபகரணங்கள் உதவியோடும் , மருத்துவ நிபுணர்கள் உதவியோடு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, பொதுசெயலாளர் அன்பழகன், கனிமொழி  மற்றும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்  என ஒவ்வொருவராக மருத்துவமனையிலிருந்து  வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில்,  மருத்துவமனையிலிருந்து, வீட்டிற்கு செல்லும் முன்பு காவேரி மருத்துவமனை வளாகத்தில் பேசிய முக அழகிரி தலைவர் நலமாக உள்ளார் என கூறியுள்ளார். அதேபோல கனிமொழியும் அவர் நன்றாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நம் தலைவருக்கு, மருத்துவர்கள் அறிக்கையில் வெளியிட்டதைப்போல தர்க்களிக்க பின்னடைவே ஏற்பட்டு பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப்பிறகு உடல்நிலை சீராகி வருகிறது. ஆகவே கழகத் தோழர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுத்து விடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், அமைதி காத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்திருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு வேண்டு கேட்டுக்கொள்கிறேன். என கூறியுள்ளார்.