Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின், ரஜினி, மருத்துவர் ராமதாஸ் வாக்களிப்பு. காலை முதலே கலைகட்டிய வாக்குச்சாவடி மையங்கள்..

சென்னை தேனாம்பேட்டையில் வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் கமலஹாசன் தனது மகள்களுடன் ஜனநாயக கடமையாற்றினார். அதேபோல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவுடன் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு,  கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், எஸ்ஐஇடி கல்லூரியில் ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். 

Stalin Rajini, Dr. Ramdas vote. Artistic polling centers from early morning ..
Author
Chennai, First Published Apr 6, 2021, 8:32 AM IST

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.  அனைத்து சாதிகளுக்கும் தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதுபோலவே புதுவை மற்றும் கேரளாவிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய உடன் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

Stalin Rajini, Dr. Ramdas vote. Artistic polling centers from early morning ..

இந்நிலையில் சென்னை டி நகர் இந்தி பிரசார சபாவில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் சூர்யா கார்த்தி ஆகியோர் குடும்பத்துடன் காத்திருந்து வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் கமலஹாசன் தனது மகள்களுடன் ஜனநாயக கடமையாற்றினார். அதேபோல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவுடன் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு,  கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், எஸ்ஐஇடி கல்லூரியில் ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் வரிசையில்நின்றுவாக்களித்தார். 

Stalin Rajini, Dr. Ramdas vote. Artistic polling centers from early morning ..

அதேபோல சென்னை விருகம்பாக்கத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்தராஜன் வாக்களித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் வாக்களித்தார். தமிழக சபாநாயகர் தனபால் சேலம் குகை மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் வேளாங்கண்ணி பள்ளியில் வாக்களித்தார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடலூர் புலியூர் காட்டுசாகை கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் திண்டிவனம் ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். இப்படி தொடர்ந்து பிரபலங்கள் அரசியல் கட்சியினர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் பொதுமக்களும் காலை முதலே ஆர்வத்துடன் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios