எவ்வளவோ இடையூறு, வாரிசுகளுக்கு சீட் என்ற விமர்சனம் இருந்தும் சீட்டு கொடுத்து அழகு பார்த்த ஸ்டாலின் போட்டோ கூட போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பது ஸ்டாலின் மீது விசுவாசமாக இருக்கும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

திமுக எம்.எல்.ஏ, எம்பி மற்றும் முக்கிய நிர்வாகிகள், அந்த கட்சியின் தலைவரை செய்ததைபோல, ஜெயலலிதாவையோ அல்லது கலைஞரையோ அலட்சியம் செயதிருந்தால், குறைந்தது 100 பேரின் பதவியாவது பறிபோயிருக்கும். 

அந்த அளவிற்கு, ஸ்டாலின் புகைப்படத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்தாமல், தங்கள் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார் என்பதையும் மறந்து, தான் தோன்றித்தனமாக, தன்னிச்சையாக, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றத்திலிருந்தே அவர் முன்னால் பேசும் போது மரியாதையுடனும், விசுவாசமாக இருப்பதாக நடித்து வருகிறார்கள். ஆனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைவர்கள், தங்கள் சொந்த மாவட்டத்தில் நிகழும் உள்கட்சி பிரச்சனையை மையமாக வைத்து, சம்மந்தம் இல்லாமல் திமுக தலைமையை ஒரு சிலர்,சாடி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான், இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் வகையில் ஒட்டு மொத்த கட்சிக்கும் அகில உலக தலைமையான ஸ்டாலினை கன்டுகொள்ளாமல் வெளியிடப்பட்டிருக்கும் வேலூரில் நடக்கும் பிரசார போஸ்டரில், ஸ்டாலின் விசுவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

எவ்வளவோ இடையூறு, வாரிசுகளுக்கு சீட் என்ற விமர்சனம் இருந்தும் கூட அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ஸ்டாலினால் மட்டுமே  சீட் கொடுக்கப்பட்டு நிற்கிறீர்களே , அந்த கண்டிக்காவது போட்டிருக்க வேண்டாமா என அப்பகுதி திமுகவினரை அதிர்ச்சியில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

என்னதான் நியாபக மறதியில் மறந்து விட்டிருந்தாலும், தனது தந்தை துரைமுருகன்  போட்டோவை போடத்தெரிகிறது தலைவர் போட்டோ போடா மறந்து போச்சா?  என கேள்வியெழுப்புகின்றனர் லோக்கல் திமுகவினர். குறைந்தபட்சம் ஸ்டாம் சைஸ்ஸில் போட்டுள்ள அண்ணா, பெரியார் போட்டோ அளவுக்காவது போட்டிருக்கலாமே என்பது திமுகவினர் கருதுகின்றனர்.

இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருப்பத்தூர் நல்ல தம்பி எம்.எல்.ஏ ஸ்டாலின் போட்டோவை போடாமல் போஸ்டர் அடித்தது அப்பகுதி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்கிறது. அப்போதே  மூத்த தலைவர்களில் ஒருவரான அரக்கோணம் எம்பி ஜகத்ரட்சகன் வாரப் பத்திரிகையில் கொடுத்த விளம்பரத்தில் கூட ஸ்டாலின் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது திமுக தொண்டர்களை வேதனடையச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.