stalin Performance Respecting the 74-year-old Maternal Dreams ...
ஈரோட்டைச் சேர்ந்த திமுக பெண் தொண்டர் ஒருவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் தலைவர் கருணாநிதியை சந்தித்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் தொண்டர்களை சந்திக்க முடியாத நிலை இருந்து வந்தது.
அதன்பின்னரும் நீண்ட நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டி இருந்ததால் தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

இதனிடையே உடல் நலம் தேறி வர தொண்டர்களை சந்திக்க ஆரம்பித்தார் கருணாநிதி. பிரதமர் மோடி கருணாநிதியை பார்த்து உடல்நலம் விசாரிக்க வந்தபோது வாசல் வரை வந்து தொண்டர்களை நோக்கி கையசைத்து சிரித்து குதூகலப்படுத்தினார்.
திமுகவிற்கு பல கோடி தொண்டர்கள் உள்ளனர். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை சந்திப்பதற்காக, ஈரோட்டை சேர்ந்த பாப்பாத்தி என்ற 74 வயது மூதாட்டி பலமுறை முயற்சி செய்து வந்தார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு தெரிய வர உடனே அவரை வீட்டுக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்து கருணாநிதியையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் திமுகவினர் ஷேர் செய்து வருகின்றனர்.
