Asianet News TamilAsianet News Tamil

"தலையும் நானே...!! பொருளும் நானே..!!" - தளபதியின் வியூகம்

stalin new-chief-of-dmk-sw57mv
Author
First Published Jan 4, 2017, 10:10 AM IST


இன்று கூட உள்ள பொதுக்குழு மூலம் அதிகாரபூர்வமாக முடிசூடப்போகிறார் மு.க.ஸ்டாலின். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் வாகை சூடிவிட்டார் ஸ்டாலின்.

1968 க்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இன்னும் சொல்லப்போனால் கனிமொழியின் வயதும் ஸ்டாலினின் அரசியல் அனுபவமும் ஒன்று என்று சொல்லக்கூடிய அளவுக்கு நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர் மு.க.ஸ்டாலின்.

தந்தையின் பிரபலம் இவருக்கு சாதகம் , அதுவே இவருக்கு பாதகமும் கூட. குறிப்பிட்ட காலம் வரை  சரியான அரசியலில் இறங்காமல் இருந்த ஸ்டாலினின் வாழ்க்கையை புரட்டி போட்டது ஓராண்டு மிசா சிறைவாசம். 

அதன் பின்னர் ஓரளவு கவனிக்கப்பட்டார் ஸ்டாலின். ஒரு புறம் தந்தையின் தீவிர அரசியல்  , மறுபுறம் மாமா முரசொலி மாறனின் அரசியல் இரண்டுக்கும் நடௌவில் ஸ்டாலின் சோபிக்க முடியவில்லை. 

ஆரம்பம் முதலே அதிரடி அராசியல் செய்யாதவர் ஸ்டாலின். அதிரடி அரசியல் , பரபரப்பாண பேச்சாளர் என்ற தந்தையின் முகம் வேறு இவரது முகம் வேறு. ஆனாலும் கவனிக்கப்பட்டே வந்த ஸ்டாலின் தனக்கு என்று ஒரு இடத்தை 1989 சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் தான் பெற முடிந்தது.

ஆனாலும் அப்போதைய திமுக ஆட்சி கலைக்கப்பட 91 - 96 காலகட்டத்தில் தன்னை வளர்த்துகொண்ட ஸ்டாலின் 96 ல் சென்னை மாந்கராட்சி மேயரான போது தன்னை நன்றாக வளர்த்து கொண்டார். அவரது நிர்வாகம் வெளிப்பட்டது. தந்தையிடமிருந்து பெற்ற இந்த திறமை மட்டுமல்ல சுறுசுறுப்பிலும் தந்தைக்கு நிகரானவர்.

அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு துணை முதல்வர் பதவி , கட்சியில் துணைப்பொதுச்செயலாளர் பதவி , அதன் பின்னர் பொருளாளர் பதவி என தனிப்பட்ட  மூலம் மேலும் மெருகேறினார் ஸ்டாலின். அதன் பின்னர் கட்சியில் கிட்டத்தட்ட தலைமை பதவிக்கு ஸ்டாலின் எப்போதோ தயாராகிவிட்டார்.

கட்சியின் பெரும்பாலான மாவட்டசெயலாளர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்றுகூறும் வகையில் கட்சியில் வலுவான அடித்தளத்தை அமைத்து கொண்டார் ஸ்டாலின்.

அவருக்கு போட்டியாக இருந்த அழகிரி அவரது சில நடவடிக்கைகளால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலின் அணியில் இணைந்தனர். தற்போது அழகிரி திமுகவுக்கு உள்ளே வருவதே ஸ்டாலின் கையில் தான் உள்ளது என்ற நிலை உருவாகியுள்ளது.

இதேபோல் கனிமொழியும் ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்டார் என்று பரவலான கரூத்து உண்டு. தனக்கு போட்டியாக இருந்தவர்களை ஓரங்கட்டி கட்சியில் தனக்கான தலைமை பதவிக்கு மோதிய ஸ்டாலினுக்கு ஒரே தடை தந்தை மட்டுமே. 

அவரது வயோதிகம் காரணமாக தற்போது அதுவும் நீங்கியுள்ளது. ஆனாஅலும் தான் இருக்கும் வரை தான் தான் தலைவர் என்பதில் திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருப்பதால் செயல் தலைவர் என்ற ஒரு புதிய பதவியை உருவாக்கி அதன் மூலம் கட்சியின் தலைமைக்கு ஸ்டாலின் வந்துவிட்டார்.

கட்சியின் பண விவகாரங்களை கையாலுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஸ்டாலின் தற்போது தலைமை இடத்திற்கு வர ஒரு காரணம் என்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios