மனஉறுதி படைத்தவர்கள் திமுக காரர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் 48 ஆண்டுகளில் கருணாநிதி இல்லாத பொதுக்குழுவில் கண்ணீர்… கண்ணீர்… இதுதான் ஹைலைட்டாக இருந்தது.

கருணாநிதி இல்லாத குறை ஒன்று, அதைவிட உச்சம் மு.க.ஸ்டாலினின் 20 ஆண்டு கனவு, செயல்பாட்டுக்கு வருகிறது என்ற ஆனந்த கண்ணீர் ஆகியவற்றால் ஒருவிதமான உணர்ச்சிப்பூர்வமான நிலையிலேயே நடைபெற்றது திமுகவின் பொதுக்குழு கூட்டம்.

திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான துரைமுருகன் பேசும்போது, “கருணாநிதி இல்லாத பொதுக்குழுவை நினைத்து முதலில் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர், மு.க.ஸ்டாலினை பதவியேற்க வரும்படி அழைத்தபோது மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக கதறி அழுதார். இதை பார்த்த ஸ்டாலினும், கண்ணீர் விட்டு அழுதார்.

ஸ்டாலின் கண்ணீர் விடுவதை பார்த்த, திமுக நிர்வாகிகளும், கண்ணீர் விட்டதால் மனஉறுதி படைத்தவர்கள் திமுகவினர் என்ற பிம்பம் உடைந்து, இவர்களும் சென்டிமென்டுக்கு அடிமையானவர்கள் என்பது நிரூபனமானது.