3770 திமுகவின் நிர்வாகிகள் ஏகோபித்த ஆதரவோடு பலத்த கரகோஷத்தோடு திமுகவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுவிட்டார் மு.க.ஸ்டாலின். இதனால், அவரது 18 ஆண்டு கனவு நினைவாகி இருக்கிறது.

திமுகவின் சட்டவிதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு, அவர் செயல் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக பொது செயலாளரான க.அன்பழகன் அறிவித்தார். அப்போது அறிவிப்பை வாசிக்கும்போதே கண் கலங்கினார் அன்பழகன்.

மு.க.ஸ்டாலின் தீவிர ஆதரவாளர்களான மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஷ் உள்பட ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட ஏராளமான நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதனர். ஒரு கட்டத்தில் நிர்வாகிகளின் கரகோஷம் அதிகமாகி இருந்தபோது, ஸ்டாலினும் கண் கலங்கினார்.

தொடர்ந்து அவர் பொருளாளராகவும் செயல்படுவார். செயல் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு, தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரிகளும் வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்பறித்த வேளையில், மு.க.ஸ்டாலினின் சகோதரியான கனிமொழி, முகத்தில் எந்த ஒரு ‘‘ரியாக் ஷனையும்” காட்டாதது “ஹைலைட்”.