கருணாநிதி மறைவிற்கு பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். கழக தொண்டர்கள்  மற்றும் கட்சி உறுபினர்கள் ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.  இந்நிலையில் பல ஆண்டுகளாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், கோவை மேட்டுப்பாளையத்தை திமுக ஆதரவாளரான ரங்கம்மா, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்தி சென்றார்.

 

103 வயதான ரங்கம்மா மூதாட்டி, மேட்டுபாளையம் தேக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இருந்தே, திமுக வில் இருந்த அவர், அவருடைய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கலைஞரை நேரில் சந்திக்க வேண்டிய எண்ணம் இருந்தது. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.. எனவே திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், இன்று நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.