காவிரி மருத்துவமனை  தீவிர சிகிச்சையில்  திமுக தலைவர் கருணாநிதி   அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், உடல்நிலையில் பின்னடைவு என அறிக்கையில் குருப்பிட்டிருந்தாலும், மருத்துவ உபகரணங்கள் உதவியோடும் , மருத்துவ நிபுணர்கள் உதவியோடு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அறிக்கை வெளியான சில நிமிடங்களில் மருத்துவமனையை விட்டு குடும்ப உறுப்பினர் என ஓவ்வொருவராக வெளியேறினர்.

இந்த நிலையில் நேற்று இரவு காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,   காவிரி அறிக்கை வெளியாகி, 24 மணி நேரம் ஆகிவிட்டதால், இன்று இரவு அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காவேரி மருத்துவமனையின் அறிக்கை 9:50 க்கு வெளியானது. உடல்நிலை சீராக உள்ளது என கூறியுள்ளனர். 

இதற்க்கு முன்னதாக, சென்னையில் எல்டாம்ஸ் சாலையில் இருந்து மருத்துவமனை வரை உள்ள கடைகள் அடைப்பு, காவேரி மருத்துவமனையை சுற்றிய கடைகளை அடைக்க போலீஸார் உத்தரவு,  அதேபோல, மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும்  கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

உடல்நிலையில் பின்னடைவு என அறிக்கையில் குருப்பிட்டிருந்தாலும், மருத்துவ உபகரணங்கள் உதவியோடும் , மருத்துவ நிபுணர்கள் உதவியோடு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, பொதுசெயலாளர் அன்பழகன், கனிமொழி  மற்றும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்  என ஒவ்வொருவராக மருத்துவமனையிலிருந்து  வெளியேறியுள்ளனர்.