போராட்டத்தில் ஒத்தையா களமிறங்கிய மூதாட்டி...! ஸ்பெஷல் அழைப்பு விடுத்த   ஸ்டாலின் ...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

இதில் திமுகவினர் தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதியில் திரளாக ஒன்று சேர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் மறியல் செய்தும், பேருந்தை வழி மறித்தும் தங்களுடைய போராட்டத்தை  முன்னெடுத்து சென்றனர்.

இந்நிலையில்,வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்பூரில் திமுக நடத்திய போராட்டத்தில்  பங்கு பெற்ற மூதாட்டி ஒருவர், பெங்களூரு பைபாஸ் சாலையில்,கையில் கட்சிக் கொடியை ஏந்தி சென்று, தனி ஒரு ஆளாய் பேருந்தை வழிமறித்து நிற்க செய்தார்.

இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சி செய்தி சேனலில் வெளியானது. இதன் எதிரொலியாக அந்த மூதாட்டியை கௌரவிக்கும் வகையில், அவருக்கு ஸ்பெஷல்   அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின்.விரைவில் இவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை  சந்திக்க உள்ளார்

திமுக தொண்டர்கள் மத்தியில்  இவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும்  இந்த போராட்டத்தின் மூலம் திமுகவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையிலும் அமைந்துள்ளது.