Stalin investigation with his party carders

ஒரு கட்சியின் ரியல் லட்சணமெல்லாம் அக்கட்சியின் ஆய்வு கூட்டங்களில்தான் அழகாய் வெடித்து வெளியே தெரியும் போல. அப்படித்தான் வெடவெடவென வெளி வந்து கொண்டிருக்கிறது தி.மு.க.வின் திகுதிகு மறுபக்கங்கள். காரணம் அக்கட்சியின் செயல்தலைவரான ஸ்டாலின் மாவட்ட வாரியாக கலந்தாய்வு கூட்டங்களை அடிக்கடி நடத்திக் கொண்டிருப்பதால்தான்.

அந்த வகையில் சென்னை தெற்கு மாவட்ட கழகத்தை ஆய்வு செய்யும் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்வாகிகள் சொந்த மாவட்ட பிரச்னையை பேசுவதை விட்டுவிட்டு ‘காங்கிரஸால் தோற்றோம்! கம்யூனிஸ்டுகளின் கூட்டணி வேண்டாம்! விடுதலை சிறுத்தைகளை இழுக்க வேண்டாம்.’ என்று பெரிய கதைகளை பேசியிருக்கின்றனர்.

உடனே டென்ஷனான ஸ்டாலின் ‘இந்த ஆலோசனை கூட்டம் உங்க மாவட்டத்தோட வண்டவாளத்தை பற்றி ஆலோசனை பண்ணத்தான். அதனால கூட்டணி பற்றியெல்லாம் நீங்க எங்கிட்ட பேச வேண்டியதில்லை. உங்க ஒவ்வொருத்தர் பற்றியும் எனக்கு நிறைய புகார்கள் வந்து குவியுது.
விசாரணை நடத்த கட்சிக்காரனை அனுப்புனா அந்தாளை பல வகையில சரிகட்டி அனுப்பிடுறீங்க. அதனால தனியார் துப்பறியும் ஆட்களை வெச்சு உங்களை எல்லாம் ஆய்வு பண்ணிட்டிருக்கேன். ரிப்போர்ட் வந்ததும் ஆக்‌ஷன் உண்டு.” என்றாராம்.

ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத அவர்கள், ‘சரி நடவடிக்கை எடுக்கட்டுமே? என்னா இப்ப? நாம போயிட்டா இவ்வளவு செலவு பண்ணி கட்சி வேலை பார்க்க இங்கே எவன் வருவான்?’ என்று தெனாவெட்டாக தங்களுக்குள் பேசி கலைந்திருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தன் கட்சி நிர்வாகிகளின் லட்சணத்தை தன் வாயாலேயே ஸ்டாலின் போட்டுடைத்ததுதா ஹைலைட் ஆகியிருக்கிறது.