தேவர் குரு பூஜைக்கு பசும்பொன் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு கொடுக்கப்பட்ட திருநீற்றை வாங்கி கழுத்தில் கொஞ்சம் தடவிக்கொண்டு, மீதத்தை கீழே போட்டு விட்டு சென்றார். இது வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த விவகாரம் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என ட்விட்டரில் ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாகி வருகிறது. அதில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’’மு.க.ஸ்டாலினை தேவர் ஜெயந்திக்கு யார் வர சொல்லி அழுதது? திருநீரை வாங்கி கழுத்தில் தடவிட்டு, கீழே தட்டிட்டு போகிறார். ஒவ்வொரு முறையும் ஸ்டாலினுக்கு விபூதியால் வரும் வினைகள்.!

 

இந்த முறை இந்த விபூதிதான் திமுக தோல்விக்கு காரணமாக இருக்க போகிறது. குல்லா போட்டு கஞ்சி குடிச்சா பகுத்தறிவு, நெற்றியில் திருநீறு வைத்தால் மூடநம்பிக்கையா? தேவரின் திருக்கோவிலுக்குள் வந்து அவமரியாதை செய்த ஸ்டாலினே, உடனடியாக பசும்பொன் வந்து மன்னிப்பு கேள், இல்லையென்றால் நீ எங்கு சென்றாலும் உங்களையும் உங்கள் கூட்டணியினரையும் எதிர்ப்போம். தென் மாவட்டத்தில் நீ கால் பதிக்கவே முடியாது’’ என எதிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.