stalin in congress book release
வீசப்படும் சேற்றை குழைத்து எரியப்படும் கற்களை அடுக்கி வீட்டை விரிவாக்கம் செய்யக் கூடியது தான் திமுக என்று அக்கட்சியின் செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்......
திமுக வரலாற்று நூல் குறித்து கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து க.திருநாவுக்கரசு எழுதிய திமுக வரலாறு நூல் கட்சித் தொண்டர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று.

சமூக, அரசியல் தளங்களில் திமுகவின் வரலாறு என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. திராவிட இயக்கம் ஆற்றியுள்ள ஆயிரமாயிரம் பணிகளால் சமுதாயம் பெற்ற முன்னேற்றம் எண்ணற்றவை.சொல் அம்பு, கல்வீச்சி, துரோகங்களை உரமாக்கி வலிவு, பொலிவுடன் திமுக திகழ்கிறது. வீசப்படும் சேற்றை குழைத்து, எறியப்படும் கற்களை அடுக்கி வீட்டை விரிவாக்கம் செய்யக்கூடியது திமுக.

இதற்கிடையே சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வரும் 25 ஆம் தேதி திமுக வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார்.
