சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் வணிகர் தினத்தில் சங்க 35 வது ஆண்டு மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக கட்சி தலைவர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வணிகர்களுக்காக பா.ம.க களம் இறங்கி போராடியுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் பணமதிப்பு இழப்பால் சிறுவணிகர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஆண்டுக்கு 50 லட்சத்துக்கு விற்ற முதலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு தேவையென வணிகர்கள் கேட்டதைதான் பா.ம.கவும் வலியுறுத்தி வருகிறது என கூறினார்

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பேசியபோது

திமுக ஆட்சியில்தான் பலமுனை வரிவிதிப்பை ஒருமுனை வரிவிதிப்பாக மாற்றிப்பட்டது. 580 பொருட்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டது. மத்தியில் இருக்கும் ஆட்சியும் மாநில ஆட்சியும் இருமுனைத்தாக்குதலை வணிகர்கள் மீது தொடுக்கின்ற்னர். மத்திய அரசு பணமதிப்பு இழப்பால் வணிகர்கள் அன்றாட வாழ்க்கையை படுகுளிக்குள் தள்ளியது. இதனால் ஏடி எம் மிஷின் முன் வணிகர்கள் நிற்க நேரிட்டது. வணிகர்களுக்கு உரிமைகளை கொடுத்த ஆட்சி தி.மு.கதான். மேலும் தற்போதைய தமிகத்தில் மாநில அரசின் உரிமைகளை மீட்க வேண்டுமென ஸ்டாலின் பேசினார்