ராஜாத்தி காலில் விழுந்து வணங்கிய ஸ்டாலின்!! DMK வில் அதிசயம் இது...
அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்தி ஃ பேமிலி மாதிரி இருந்த தயாளு ராஜாத்தி அம்மாள் குடும்பம் கருணாநிதியின் தற்போது ஒன்றிணைந்து செயல்படுவது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக தலைவர்-பொருளாளரை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மனு மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை 1307 பேர் முன்மொழியவும் வழிமொழியவும் செய்திருந்தனர். தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் தவிர யாரும் போட்டியிடாததால், ஸ்டாலின் கழகத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்னி நட்சத்திரம் பிரபு - கார்த்தி ஃ பேமிலி மாதிரி இருந்த ராஜாத்தி - தாயாளு குடும்பம் கருணாநிதி மறைவிற்குப் பிறகு இவ்வளவு நெருக்கம் காட்டுவது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. தற்போது கட்சிப் பிரச்சனையாக இருந்தாலும் சரி வீட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி ஸ்டாலின் அண்ணனிடம் ஒரு வார்த்தை கேட்டு சொல்கிறேன் என்று தான் கடந்த சில வருடங்களாக கனிமொழி கூறி வருகிறார். இந்த நெருக்கம் நேற்று முன்தினம் தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது அண்ணன் ஸ்டாலினுக்கு அன்பு முத்தம் அளித்து இதை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் அங்கு தனது சகோதரி செல்வியிடம் வாழ்த்து பெற்ற அவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சி ஐடி காலணி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் தனது சித்தி ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கி ஆசி வாங்கியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
எலியும் பூனையுமாக இருந்த தயாளு - ராஜாத்தி அம்மாள் குடும்பம் தற்போது ஒன்றிணைந்து செயல்படுவது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.