stalin criticize modi and government

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முன்னதாகவே மத்திய அரசுக்கு தெரியும். அதனால்தான் பிரதமர் மோடி மருத்துவமனையில் வந்து ஜெயலலிதாவை பார்க்கவில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான கோபத்தை விட ஆட்சியைக் கவிழ்க்காமல் இருக்கும் திமுக மீதுதான் மக்கள் அதிகமான கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முன்னதாகவே தெரிந்ததால்தான் பிரதமர் மோடி அவரை மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லை. அந்த உண்மைகளை மறைக்கவே இந்த புதிய ஆளுநர் நியமனம் நடந்துள்ளது. இடைதேர்தல்களில் பயன்படுத்தியதாக சொல்லபட்ட ஜெயலலிதா கைரேகைகளும் பொய் தான்.

அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த போது தமிழக அரசு சார்பில் மருத்துவ குறிப்புகள் வெளியாயின. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மருத்துவ குறிப்புகள் ஏன் வெளியிடவில்லை? என கேள்வி எழுப்பினார்.