stalin criticize minister jayakumar
அமைச்சர் ஜெயக்குமார், தான் ஒரு மீன்வளத்துறை அமைச்சர் என்பதை மறந்து சூப்பர் முதல்வராக செயல்பட்டு வருவதாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு பலமுறை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததை சுட்டிக்காட்டினார்.
மேலும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மீண்டும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், இப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
நெல்லையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற குடும்பத்திற்கு கந்துவட்டி தொல்லை கொடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
காசிமேடு மீனவர்கள் போராட்டம் தொடர்பாக பேசிய ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சராக இருந்துகொண்டு மீனவர்களைப் பற்றி சிந்திக்க அமைச்சர் ஜெயக்குமாருக்கு நேரம் இல்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் என்பதை மறந்து அவர், சூப்பர் முதல்வராக செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
