அடுத்த 6 மாதங்களில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான குதிரைபேர அரசு கவிழ்ந்து விடும் என்றும் அதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் எவனுடைய தயவும் இல்லாமல், ஆட்சி அமைப்போம் என்றும் திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேசிய பேச்ச திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கும் காங்கிரஸ், மதிமுக, இடது சாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை அதிர்ச்சி  அடையச் செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம்  பெருந்துறையில் நடைபெற்ற இரண்டு நாள் மண்டல மாநாட்டின் பேசிய திமுக செய்ல் தலைவர் மு.க.ஸ்டாலின், அடுத்து வரும் தேர்தலில் எவனுடைய தயவும் இல்லாமல், திமுக ஆட்சி அமைக்கும் என ஒருமையில் பேசினார். மேலும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என தெரிவித்தார்.

இந்த மாநாட்டுக்கும் முன்பு சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்  நடந்த, கலந்துரையாடல் பேசிய நிர்வாகிகள், திமுக  தனித்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

2016 சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, 42தொகுதிகளில், எட்டில் மட்டும், அக்கட்சி வெற்றி பெற்றது. அதனால்தான் திமுக ஆட்சி அமைக்கமுடியாமல் போய்விட்டது என கருத்துத் தெரிவித்தனர்.

 அதே நேரத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., போன்ற கட்சிகளுடன், கூட்டணி அமைக்க வேண்டாம்  என பலர்  வலியுறுத்தினர்.

திமுக நிர்வாகிகள் கொடுத்த உற்சாகம் மற்றும் இரண்டுபட்டுக் கிடக்கும் அதிமுக என சாதகமான சூழ்நிலை இருப்பதால் ஸ்டாலின் தனித்ப் போட்டி என்ற துணிச்சலான முடிவை எடுத்திருப்பதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஸ்டாலின் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுகவை நம்பி இருக்கும் காங்கிரஸ், ஸ்டாலினை முதலமைச்சராக்கியே தீருவேன் என மேடைக்கு மேடை முழங்கும் வைகோ ஆகியோரை யோசிக்க வைத்துள்ளது.

இது தவிர திமுகவுடன் கூட்டணி மூடில் இருக்கும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.