தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் தனது பதவியை  ராஜினாமா செய்து விட்டு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் அவர் மீது பல்வேறு ஊழல் புகார் உள்ளதால், தான் குற்றமற்றவர் என்பதை நிருபித்து அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.மே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டு வாடா செய்யப்பட்டதாக  எழுந்த புகாரை அடுத்து அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததது தொடர்பான ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய பாஸ்கர் நேற்று 5வது முறையாக வருமான வரித்துறை முன்வு ஆஜரானார்,

இதே  போன்று லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பனை செய்ய அனுமதி அளித்தாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் தனது பதவியை  ராஜினாமா செய்து விட்டு வழக்கை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விஜய பாஸ்கர் மீது பல்வேறு ஊழல் புகார் உள்ளதால், தான் குற்றமற்றவர் என்பதை நிருபித்து பின்னர் அவர் அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.