Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு - ஓபிஎஸ் , தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

stalin case-on-ops
Author
First Published Jan 11, 2017, 5:00 PM IST


சட்டமன்ற குழுக்களை அமைக்ககோரி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டசபை செயலாளர், அவை முன்னவர் உள்ளிட்டோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து புதிய அரசு பொறுப்பேற்றது. புதிய சட்டமன்றம் அமைந்து 6 மாதங்களாகியும்,  தணிக்கை குழு, நிலைக்குழு, பொதுக்கணக்கு குழு, உரிமை குழு, விதிகள் குழு, பொது நிறுவனங்கள் குழு, அலுவல் ஆய்வுக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்கப்படவில்லை. 

stalin case-on-ops

இதுபற்றி திமுக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர்  தனபாலை சந்தித்து மனு அளித்தார். பின்னர் கவர்னரையும் சந்தித்து  மனு அளித்தார். குழு அமைக்காவிட்டால் சட்டப்படி போராட்டத்தை தொடருவோம் வழக்கு போடுவோம் என்றனர். 

இந்த  குழுக்களை விரைந்து அமைக்க சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவை தலைவர், தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன், புதிய ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சட்டமன்ற குழுக்கள் அமைக்கப்படவில்லை. 

stalin case-on-ops

எனவே சட்டசபை குழுக்கள் அமைக்கபட வேண்டும் சட்டசபை சபநாயகர், செயலாளர்,  தமிழக கவர்னர் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த குழுக்கள் பணி மிக முக்கியமானது. ஆனால் தொடர்ந்து காலதாமதம் நடைபெறுவதாக வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த குழுக்களை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தான் அமைக்க முடியும். மனுதாரர் முறையாக சம்பந்தப்பட்டவர்களுக்கு மனு அளிக்காமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் சட்டசபை செயலாளர், அவை முன்னவர் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகியொர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜனவர் 19ம் தேதிக்கு நீதிபதி  ஒத்தி வைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios