திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 67வது பிறந்தநாளாகும். அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

பிறந்தநாளன்று அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை ஸ்டாலின் சந்திப்பது வழக்கம். அப்போது அவருக்கு பரிசுகள் வழங்கியும் பொங்கொத்து கொடுத்தும் கட்சியினர் வாழ்த்துவர். கடந்த ஆண்டு பரிசுகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்குமாறு ஸ்டாலின் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான புத்தங்கள் குவியவே, அதை நூலங்களுக்கு ஸ்டாலின் அளித்தார். இந்தநிலையில் தற்போது திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

அதன்காரணமாக இந்த வருடம் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் எனவும், தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துவதை தவிர்க்குமாறும் கூறியிருந்தார். எனினும் ஏராளமானோர் வாழ்த்தவே, பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், இனமானப் பேராசிரியர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திருந்தேன். இருப்பினும் வாழ்த்துகள் சொல்லியும், பூங்கொத்து அனுப்பியும் நலத்திட்ட உதவிகள் செய்தும் பெருமைப்படுத்திய உள்ளங்களுக்கு என் அன்புகலந்த நன்றிகள்! உங்கள் வாழ்த்து எனக்கு உரமாகும்!' என்று கூறியுள்ளார்.

அமைதியை நிலைநாட்ட அனைத்தும் செய்ய தயார்..! ரஜினி அதிரடி..!