"நம்ம ஆதரவாளர்கள் எல்லாம் அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுங்கன்னு" ஆளுங்கட்சி வேட்பாளருக்கு பச்சை கொடியை தனது ஆதரவாளர்களிடம் காட்டியிருக்கிறாராம் அஞ்சாநெஞ்சன். அண்ணனின் இந்த அதிரடி முடிவால் கதிகலங்கிப்போயுள்ளாராம் ஸ்டாலின்.

தி.மு.கவின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளரான மு.க.அழகிரி தனது  ஆதரவாளர்களிடம்  திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.கவிற்காக வேலைபார்க்க சொல்லியிருக்கிற விஷயம் ஸ்டாலின் வரை போய் அதற்காக ஸ்டாலின் டென்ஷனானதாக சொல்லப்படுகிறது.

திருப்பரங்குன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க சார்பில் முனியாண்டியும்,அ.ம.மு.க சார்பில் மகேந்திரனும்,தி.மு.க சார்பில் டாக்டர்.சரவணனும் போட்டியிடுகின்றனர். மதுரையை பொறுத்தவரை அரசியலில் என்ன முடிவெடுப்பார்  அழகிரி தி.மு.க உடன்பிறப்புகள் ஆர்வமாக இருப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்பு கூட மதுரை லோக்சபா தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேஷன் கூட அழகிரியை சந்தித்தது ஆதரவை கேட்டது கூட இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அதே போல நடக்கவிருக்கும் திருப்பரங்குன்ற இடைத்தேர்தலுக்கு மு.க.அழகிரி யாருக்கு ஆதரவளிப்பார்? என்ற கேள்வியும் மதுரையிலுள்ள தி.மு.க உடன்பிறப்புகளுக்கு மத்தியில் எழுந்தது.

இந்த கேள்வியை மு.க.அழகிரியை சந்தித்த போது நேரடியாகவே கேட்டு விட்டார்களாம். அதற்கு அழகிரியும் முதலில் தேர்தல் நிலவரங்களையெல்லாம் கேட்டு விட்டு பின்பு "நம்ம ஆதரவாளர்கள் எல்லாம் அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுங்கன்னு" ஆளுங்கட்சி வேட்பாளருக்கு பச்சை கொடியை தனது ஆதரவாளர்களிடம் காட்டியிருக்கிறாராம் அஞ்சாநெஞ்சன்.