கலைஞர் மறைந்தவுடன் சிலர் தமிழ்நாட்டில் வெற்றிடம் உருவாகி விட்டதாக ஆட்டம் போட்டார்கள். ஆர் எஸ் எஸ் கூட்டம் எட்டுக்கால் போன்றது, ஆர் எஸ் எஸ் கூட்டத்தின் எட்டு கால்களையும் உடைக்கும் பலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணிக்கு உண்டு என்று அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் மா சுப்ரமணியன் ஏற்பாட்டின் கீழ் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் அரசியல் தலைவர்களின் வாழ்த்தரங்கம் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மற்றும் கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து மேடையில் கட்சியின் தலைவர்கள் உரையாற்றினர். 

துரை வைகோ மேடை பேச்சு: கட்சியின் ஒவ்வொரு பொறுப்பில் இருந்தும் படி படியாக வளர்ந்து தற்போது தமிழக முதலமைச்சராக இருந்து வருகிறார். அனைத்து முதலவருக்கும் எடுத்துக்காட்டு நம் முதலவர் செய்யப்பட்டு வருகிறார். மக்களுக்கு அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனுக்குடன் செய்து வருகிறார் முதலமைச்சர் நல்லாட்சி கண்டு மக்கள் அவருக்கு வெற்றியை வாரி வழங்கி உள்ளனர். பிற்படுத்த பட்டிலின மாணவர்கள் இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவ படிப்புக்கு சென்றதற்கு நம் முதல்வரே காரணம் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 இட ஒதுக்கீடு இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே உள்ளது 17 உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வை மத்திய அரசு ஆதரிக்கிறது. வரலாறு காணாத வெற்றியில் விஷ விதை போல் பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்றுமே நம் மண்ணில் அநீத சக்திகளுக்கு இடம் தர கூடாது, என்று பேசினார்.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேச்சு: உக்ரைனில் இருந்து தமிழகம் வருவதற்கான விமான கட்டணம் உயர்ந்து இருக்கிறது, இன்னும் சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலை உயரும். மோடி யிடம் கேட்டால், அதற்கு காரணமாக போரை காட்டுவார், ஆனால் தமிழகம் திரும்பும் மாணவர்கள் தாயகம் திரும்ப ஆகும் செலவை அரசே ஏற்று கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கிறார். இரவு தூங்கி எழுந்த பின்னர் நரேந்திர மோடி, ஸ்டாலின் சொன்னதையே சொல்கிறார். இந்திய மாணவர்கள் வருவதற்கான செலவை அரசே ஏற்கும் என்று. முதல்வர் நம்மில் ஒருவராக செயல்படுகிறார். ராஜாஜி கொண்டுவந்த குல கல்விக்கும், தேசிய கல்வி கொள்கைக்கும் என்ன வித்தியாசம்? மனுதர்மம் தான் இன்றைக்கு செயல்படுத்த படுகிறது. பாரதிய ஜனதா கட்சி பல்வேறு அமைப்புகளின் பிரிவு, பாஜக ஒரு வெறி பிடித்த கூட்டம். மத சார்பான பகை உணர்வுகளை தூண்டி, கீழ்தனமான வகையில் செயல்பட்டு வருகிறது என்று பேசினார். அவரை தொடர்ந்து,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாலகிருஷ்ணன் பேச்சு: தளபதி ஸ்டாலின் என்றைக்கு பிஜேபி கூட்டத்தை இந்தியாவில் இருந்தே ஒழிக்க முடிவு செய்து விட்டார்களோ, அப்போதே இந்த மேடையில் இருக்கின்ற கூட்டணி கட்சிகள் எல்லாம் அவருடன் கை கோர்த்து விட்டோம். ஜெய்பீம் படத்தை முதல்வர் பார்த்த பின்னர், அதனை பாராட்டி, தன்னை பாதித்த விதம் முதல்கொண்டு அறிக்கையாக வெளியிட்டு, ஆதிவாசி மக்கள் தங்கி இருந்த ஊர்களுக்கு சென்று அவர்களுக்கான தேவைகளை செய்து கொடுத்து இருக்கிறார் நமது முதல்வர். எல்லா பிரட்சனைகளையும் பக்குவத்தோடு கையாளுகிரார் முதல்வர். அந்த பக்குவம் தான் தமிழக மக்களை முதல்வரை நேசிக்க வைத்தது. தமிழ்நாடு முழுவதும் கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர மற்ற இடங்களில் 105 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 4505 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கும் கட்சி பிஜேபி மதமாற்ற தடை சட்டத்தை கர்நாடகத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அதே போன்ற மதவாதத்தை பிஜேபி இங்கு கொண்டுவர நினைக்கிறார்கள். இந்தியாவில் மதம் இருக்கிறது என்று சொல்லவும், இல்லை என்று சொல்லவும் உரிமை இருக்கிறது. இந்தியாவுக்கே விதிவிலக்காக தமிழகம் செயல்பட்டு கொண்டு இருப்பதற்கு காரணம் தளபதி ஸ்டாலின் தான். நம்முடைய வீட்டிலே நமக்கு தெரியாமல் ஆர்எஸ்எஸ் காரர்கள் இருப்பார்களோ என்ற பயம் எழுகிறது என்று பேசினார் அவரை தொடர்ந்து.

கே எஸ் அழகிரி பேச்சு: நீட் தேர்வில் நம்முடைய கருத்து, செயலாக்கம் மிகவும் எளிதானது. ராகுல் காந்தி மதுரை. வந்த போது நீட் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு, நீட் தேர்வை விரும்பிய மாநிலங்கள் நடத்தலாம், விரும்பாத மாநிலங்கள் விட்டு விடலாம் என தெரிவித்து இருந்தார் பஞ்சாப், ஹரியானா மாநில மாணவர்கள் இடையே நீட் எதிர்ப்பு இல்லை அதற்கு காரணம், அங்கே இருக்கும் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாட திட்டம் உள்ளது. ஆனால் நமது பள்ளிகளில் அவைகள் இல்லை. அப்போது, தமிழக மாணவர்கள் எப்படி CBSC பாடத்திட்டத்தை அணுக முடியும்? எங்களுடைய மாநில பாட திட்டத்தை மேம்படுத்த இன்னும் 10 ஆண்டுகள் ஆகும், எனவேதான் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம். நீட் நிலைபாட்டில் அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கும், திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கிறது. என்று அவர் பேசினார்.

திராவிட கழக தலைவர் கி வீரமணி பேச்சு: ஒரு பொதுநல வாதி அடுத்த தலைமுறையை குறித்து சிந்திக்கிறார், திராவிட மாடல் ஆட்சியில் அடுத்த தலைமுறை மாற்ற பட வேண்டும் என்ற எண்ணம் தான் திராவிடவியல். கலைஞர் மறைந்தவுடன் சிலர் தமிழ்நாட்டில் வெற்றிடம் உருவாகி விட்டதாக ஆட்டம் போட்டார்கள். ஆர் எஸ் எஸ் கூட்டம் எட்டுக்கால் போன்றது, ஆர் எஸ் எஸ் கூட்டத்தின் எட்டு கால்களையும் உடைக்கும் பலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணிக்கு உண்டு என்று அவர் தெரிவித்தார்.