stalin admitted in hospital
கண் சிகிச்சைக்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின், இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இது பற்றி விசாரித்தபோது? மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மு.க.ஸ்டாலினுக்கு கண்புரை நோய் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற நுங்கம்பாக்கத்தல் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தபின் ஓரிரு நாளில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
