இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை, மத்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, இரு தரப்பு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள், உறவுகள் மேம்பாடு, கூட்டுறவை அதிகப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இலங்கையில் நடைபெறும் 2-வது இந்திய பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார். அந்த மாநாட்டின் இடையே இலங்கை அதிபரி மைத்திரி பால சிறிசேனாவைச் சந்தித்து சுஷ்மா சுவராஜ்பேசினார்.

இது குறித்து மத்திய வௌியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார்டுவிட்டரில் கூறுகையில், “ இரு தரப்பு நாடுகளுக்கு இடைய ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது தொடர்பாக, இலங்கை அதிபர் சிறிசேனாவைச் சந்தித்து, அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.

முன்னதாக இலங்கை வௌியுறவு த்துறை அமைச்சர் திலக் மரப்பனாவுடன் அமைச்சர் சுஷ்மா கலந்துரையாடினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான சிக்கல்கள், உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன் தினம், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்து சுஷ்மா பேச்சு நடத்தினார்.

இலங்கைக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா வருகையைத் தொடர்ந்து நல்லெண்ண நடவடிக்கையாக 76 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.