Special attention to control the dengue

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்துவகை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக மாவட்டங்களில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தருமபுரியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போது பேசிய, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த கூடுதலாக மருத்துவர்கள் நியமித்துள்ளதாக தெரிவித்தார். பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை தொண்டர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

டெங்கு பாதித்தவர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த மேலும் 2 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சேமித்து வைக்கும் நீரை மூடி வைக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.