Speaking for the car than for talking in nanjil sambath by tamilisai

நாஞ்சில் சம்பத் காரியத்திற்காக பேசுவதை விட காருக்காக பேசுவார் என்றும், இன்னும் பேசுவாரா என்று பார்த்தால் இன்னோவாவிற்காக பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

பணம் வாங்கி கொண்டு கட்சிக்கு போக வேண்டும் என்றால் நான் பாரதிய ஜனதா கட்சிக்கு போயிருக்கலாம் என்றும் தலைக்கு விலை கேட்கும் கூட்டம் தான் பாஜக என்றும் கூறினார்.

இதிகாசத்தை பற்றி பேசுவதற்கு பாஜகவில் ஒருவர் கூட கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும், சசிகலாவையும், தினகரனையும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார்.

இந்நிலையில், தற்போது, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனியார் தொலைக்கட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாஞ்சில் சம்பத் காரியத்திற்காக பேசுவதை விட காருக்காக பேசுவார்.

இன்னும் பேசுவாரா என்று பார்த்தால் இன்னோவாவிற்காக பேசுவார். இது அனைவருக்கும் தெரியும்.

பணம் கொடுத்து எங்கள் கட்சியில் சேர முடியாது. நாஞ்சில் சம்பத்துக்கு எங்கள் கட்சியில் இடம் கிடையாது.

நான் பதில் சொல்லவேண்டிய அளவிற்கு நாஞ்சில் சம்பத் மரியாதையானவர் இல்லை.

ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை நான் பார்த்ததே இல்லை என்று கூறிவிட்டு அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா இடத்திற்கு சசிகலா மட்டும் தான் பொருந்துவார் என கூறியவர் நாஞ்சில் சம்பத்.

இவ்வாறு கீழ்த்தரமாக பேசும் நாஞ்சில் சம்பத்தை ஒரு தலைவராகவே நாங்கள் மதிக்கவில்லை.

இவ்வாறு கூறினார்.