Speaker Dhanapal is a police protection for his home
டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இன்று அதிரடி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை செயலாளர் க.பூபதி, இன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம், தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அதிக வாக்கைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள், முதலமைச்சரின் மீது புகார் அளித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுநரிடம், முதலமைச்சர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
மேலும், அரசிதழில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் உள்ள சபாநாயகர் தனபாலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தனபாலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
