தமிழக சபாநாயகர் ப. தனபால் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுக்கு புறப்பட்டு சென்றார்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமெரிக்கா,. இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்தப் பயணம் நடைபெற்றது. இதேபோல தமிழக அமைச்சர்கள் பலரும் துறை சார்ந்த வெளி நாட்டு பயணத்தை மேற்கொண்டார்கள். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமு விரைவில் வெளி நாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்நிலையில் தமிழக சபாநாயகர் ப. தனபால் ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவுக்கு செல்கிறார்.  கம்பாலாவில் 27-ம் தேதி வரை காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக ப. தனபால் பங்கேற்கிறார். இதற்காக, சபாநாயகர் இன்று காலை 3:30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். தோகா சென்று அங்கிருந்து கம்பாலாவுக்கு தனபால் செல்கிறார்.
இந்த மாநாட்டை முடித்துவிட்டு அக்டோபர் 11-ம் தேதி சென்னை திரும்புகிறார் ப. தனபால். அவருடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும் சென்றுள்ளார்.