கண்தெரியாத ஒரு ரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இந்த நேரத்தில் இணையதளத்தில் படு ஸ்பீடாக பரவி வருகிறது.

 

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.இவர் மற்றவர்களின் இதயங்களில் குடியிருந்து தன் பின்னணி பாடல்களால் மனக் காயங்களுக்கு மருந்து போட்டவர்.எத்தனையோ மனிதர்கள் இவர்பாடல்களில் புத்வேகம் பெற்றிருக்கலாம் மனதை குளிர்வித்திருக்கலாம்.ஆனால் இன்று எஸ்பிபி என்று அழைக்கப்படும் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.

அவரது சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.எதிரிகள் கூட எழுந்து வா பாலு என்று உருக்கமாக பதிவு செய்து வருகிறார்கள். கண்தெரியாத ஒரு ரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இந்த நேரத்தில் இணையதளத்தில் படு ஸ்பீடாக பரவி வருகிறது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக இன்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், எஸ்.பியின் பழைய வீடியோக்களை மீட்டு பார்த்து அவருக்கான ரசிகர்கள் இறைப்பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.