கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ஆற்றல் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் மிளகு ரசத்திற்கு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இது தென்னிந்திய மக்கள் மத்தியில் உற்சாகமூட்டும் செய்தியாக மாறியுள்ளது.  கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரை தமிழகத்தில் 1930 க்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர் ,  இன்னும் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த கொடூர வைரசிலிருந்து  தற்காத்துக் கொள்ள பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .  இந்நிலையில் சில பாரம்பரிய வைத்திய முறைகளையும்,  குறிப்பாக  சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்றவற்றில் உள்ள சாத்தியகூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது . 

இந்நிலையில் கபசுர குடிநீர் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்கிறது என சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ள நிலையில் ,  தற்போது அதை மக்கள் நோய் எதிர்ப்புசக்தி  கசாயமாக பருகலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது .  இந்நிலையில் நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் ரசத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை அதிகம் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிக்கான வெட்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் மூத்த   துணை இயக்குனராக உள்ள விஞ்ஞானி டாக்டர் மாரியப்பன் கூறியுள்ளார் .   இந்நிலையில் அவரது பேட்டியை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .  அதில் ,  சில  நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதில் உணவு பழக்கம் முக்கிய  பங்கு வகிக்கிறது .  அதிலும் குறிப்பாக தமிழர்களின் உணவு முறை அதற்கு முக்கிய சான்றாக உள்ளன.  உணவே மருந்து மருந்தே உணவு என தமிழர்களின் உணவு முறை தொன்று தொட்டு இருந்து வருகிறது .  இந்நிலையில் தென்னிந்தியாவில் முக்கிய உணவாக பயன்படுத்தப்படும் ரசம்.  அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

குறிப்பாக ரசத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொண்ட பூண்டு ,  மிளகு , வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் அவையும் நுரையீரலை பாதுகாக்கிறது .  இது பல வைரஸ் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது . அதேபோல்  வைரஸ் பரவலில் புவியியல் இருப்பிடம் முக்கிய பாத்திரம் வகிக்கிறது ,  அதாவது மக்கள்தொகை குறைவாக உள்ள நாகப்பட்டினம் , ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் நோய் பாதிப்பு குறைவாக இருக்கக்கூடும் என்றும்  அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல் எதிர்காலத்தில் டெங்கு கொரோனா பரவலையம் தமிழகம் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. கொரோனாவுக்கு எப்படி இதுவரை பிரத்தியேக தடுப்பூசிகள் இல்லையோ,  அதேபோல்தான்  டெங்குவை எதிர்த்துப் போராடவும் எந்த தடுப்பூசியும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.