soorya speech in AMMA kerala

சிபிஎஸ்சிஇ செய்த குளறுபடியால் தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கேரளா சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டபோது அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்த உதவிகளால் மாணவர்கள் அவருக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு நீட்தேர்வுஎழுதஉதவியகேரளமுதலமைச்சரின் பாதந்தொட்டுவணங்குவதாக நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடம் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் சங்கமான “அம்மா” திருவனந்தபுரத்தில் கடந்த திங்களன்று நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.

அப்போது சூர்யா பேசும்போது, நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் கேரள மாநிலம் வந்தபோது, ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஏற்பாடு செய்திருந்த வசதிகள் மாணவர்களுக்கு சொந்த ஊரில்இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

இந்த வசதிகளைஏற்பாடு செய்த கேரள அரசுக்குநன்றி. இந்த ஏற்பாடுகளுக்கு முன்முயற்சி செய்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின்பாதம் தொட்டு வணங்குகிறேன் என்று கூறியவர் குனிந்து மேடையை தொட்டு வணங்கினார்.

சூர்யாவின் பேச்சும் செயலும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அரங்கம் அதிர கரவொலி எழுந்தது.