Asianet News TamilAsianet News Tamil

விரைவில் ஆவின் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் வசதி... அமைச்சர் நாசர் சூப்பர் தகவல்!!

சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். 

soon the facility of selling aavin products through online says minister nasar
Author
First Published Apr 5, 2023, 8:48 PM IST | Last Updated Apr 5, 2023, 8:48 PM IST

சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பால் தட்டுப்பாடு தொடர்பாகவும், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்தும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நாசர், கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன் ஆலை ரூ.25 கோடியில் நிறுவப்படும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு இணையவழி விற்பனை வசதி ஏற்படுத்தப்படும். புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க நபார்டு வங்கியின் மூலம் ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படும். ஆவின் ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும்.

இதையும் படிங்க: எம்.எல்.ஏக்களுக்கு பலாபழம் கொடுத்த அமைச்சர் எம்.கே.பன்னீர்செல்வம்... இணையத்தில் பரவும் வீடியோ!!

ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும். செயலி மற்றும் ஆன்லைனில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை மற்றும் இதர மாநகரங்களில் ஆன்லைன் விற்பனை தொடங்கப்படும். ஆவின் நுகர்வோர்களுக்கு மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கும் பணிகள் கணினிமயமாக்கப்படும். எருமை வளர்ப்பை ஊக்குவிக்க எருமை கன்று வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட் உற்பத்தி அலகு நிறுவப்படும். கறவை மாடு வளர்ப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த கன்று பேரணிகள் நடத்தப்படும். தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும். ஆவின் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படும். திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் அமைக்கப்படும். ஆவின் நுகர்வோர் வசதிக்காக மாதாந்திர பால் அட்டை பெறுதல், புதுப்பிக்கும் பணிகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும். பணிகள் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு பால் அட்டைகள் (6-milk card) அறிமுகப்படுத்தப்படும்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் வேண்டும்.. குண்டை தூக்கிப்போட்ட அர்ஜுன் சம்பத்.!

கருணை ஓய்வூதியர்களுக்காக நிதியுதவி அளிக்க ஆவின் ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும். கருணை ஓய்வூதியர்கள் இறந்தால் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க குடும்ப பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும். கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டையில் ரூ.4 கோடியில் பால் பாக்கெட் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும். பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும். ஆவின் பால்பெருக்கு திட்டம் மூலம் ரூ.2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்கப்படும். சத்தியமங்கலத்தில் ரூ.6.75 பசுந்தீவன குச்சிகள் தயாரிக்கும் ஆலை நிறுவப்படும். நீலகிரியில் ரூ.5.46 கோடியில் ஆவின் உறைவிந்து உற்பத்தி நிலையம் மேம்படுத்தப்படும். பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு 50% மானியத்தில் காப்பீடு செய்யப்படும். மாதவரத்தில் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசு. ரூ.2 கோடியில் ரொக்கப் பரிசு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios