Asianet News TamilAsianet News Tamil

மக்களுக்கு உதவ வேண்டிய தருணம் இது... மாறாக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி இம்சிப்பதா.? மோடி அரசை சாடிய சோனியா!

தொற்று ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் 10 முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இதுபோன்ற ஒரு சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி வருவதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தவே முடியாது. 
 

Sonia gandhi slam PM Modi on Petrol price hike
Author
Chennai, First Published Jun 16, 2020, 9:10 PM IST

பேரிடர் சூழ்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், மத்திய அரசிடம் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய தருணம். ஆனால், அதற்கு மாறாக மக்கள் மீதே விலையுயர்வை சுமத்தி மென்மேலும் மக்களுக்கு இன்னல்களை மோடி அரசாங்கம் கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.Sonia gandhi slam PM Modi on Petrol price hike
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு துன்பப்படும் நிலையிலும் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருகிறது. இந்த விலையேற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்துவருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 Sonia gandhi slam PM Modi on Petrol price hike
அந்தக் கடிதத்தில், “தொற்று ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் 10 முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இதுபோன்ற ஒரு சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி வருவதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தவே முடியாது.

 Sonia gandhi slam PM Modi on Petrol price hike
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரியின் மூலம் மத்திய அரசு  2.60 லட்சம் கோடி ரூபாயை கூடுதலாக திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பேரிடர் சூழ்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், மத்திய அரசிடம் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய தருணம். ஆனால், அதற்கு மாறாக மக்கள் மீதே விலையுயர்வை சுமத்தி மென்மேலும் மக்களுக்கு இன்னல்களை மோடி அரசாங்கம் கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே. பெட்ரொல், டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios