தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறியதா? மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்.!
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொளி காட்சிகள் மூலம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றின் வேகம் பெரியளவில் இல்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொளி காட்சிகள் மூலம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கேரளாவில் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது சுகாதாரத்துறை
கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பன்னாட்டு விமான நிலையங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால், மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அந்த நிலைமை இன்னும் வரவில்லை. தமிழகத்தில் சமூக பரவல் இப்போது இல்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகம் உள்ளது.
இதையும் படிங்க;- அதிகரிக்கும் கொரோனாவால் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
கோவை ஈஎஸ்ஐ 1000 படுக்கைகள் தயார் நிலையிலும், அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல், மருந்து கையிருப்புகள் 100 சதவீதம் முழுமையாக இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.