சமீபத்தில் நடந்த ‘சர்க்கார்’ ஆடியோ லாஞ்ச் பங்ஷன் மேடையில் விஜய் ஆற்றிய உரையானது ஒரு சேர அவருக்கு தகதக வாழ்த்துக்களையும், தாறுமாறான விமர்சனங்களையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த மேடையில் சினிமா தாண்டி அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர்வாதத்தை ஆதாரத்தோடு வைத்து விஜய்யை சேதாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

’நான் முதல்வரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்!’என்று முழங்கியிருக்கிறார் விஜய். இதை அப்படியே போட்டு, அதன் கீழே சில ஆண்டுகளுக்கு முன் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்தியர் ரெய்டு மற்றும் விஜய் வரிபாக்கி வைத்துள்ள விவகாரம் ஆகிய தகவல்களைப் போட்டுள்ளனர். 

அதேபோல் சர்க்கார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை விஜய் ‘கலையை வளர்க்கணும்-ங்கிறதுக்காகவே நிதியை அள்ளி அள்ளி கொடுத்துட்டு இருக்கிறாரு. அதனாலதான் இவருக்கு கலாநிதி மாறன்னு பேர் வெச்சாங்களா?’ என்று விஜ்ய புகழ்ந்து தள்ளியிருந்தார். 

இதற்கு நெத்தியடியாக செக் வைக்கும் ஆங்கிளில், கலாநிதியை விஜய் புகழ்ந்து பேசும் வீடியோ கிளிப்பிங்ஷை போட்டு அதற்கு முன், கத்தி படத்தில் கிளைமாக்ஸில் “அலைக்கற்றை! காத்து! வெறும் காத்த மட்டுமே வித்து  கோடிக் கோடியா ஊழல் பண்ணுன ஊருய்யா இது!” என்று 2ஜி ஊழல் வழக்கை இடி இடியென இடித்து வேதாந்தம் பேசியிருக்கும் சீனை போட்டுள்ளார்கள். 

சில வருடங்களுக்கு முன் 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி பேசி தி.மு.க.வின் தலையில் குட்டிய விஜய், இன்று அதே தி.மு.க. தலைமை குடும்பத்தின் அங்கமான, அதுவும் ரத்த சொந்த அங்கமான கலாநிதி கொடுத்த மேடையில் நின்று அவரை ‘நிதியை அள்ளி அள்ளி கொடுக்கிறார்’ என்று புகழ்ந்திருப்பதை உணர்த்தியிருக்கிறார்கள். கலாநிதி அள்ளியள்ளி கொடுக்கிற நிதி, அதே காற்றுல ஊழல் செஞ்சது மூலமா கிடைச்ச 2ஜி நிதியா விஜய்? என்றும் செருகியிருக்கிறார்கள் கத்தியை. 

இதுமட்டுமா, அதே மீம் வீடியோவின் இறுதியில்...

“சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கு, வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்”என்று ‘எங்கவீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர். தலையிலடித்து பாடும் பாடலின் க்ளிப்பிங்ஸை இணைத்து தெறிக்க விட்டுள்ளனர். 
இதுமட்டுமா?...

கத்தி படத்தில் ஆற்று நீரை காப்பாற்றுகிறேன் எனும் பெயரில், கோகோ கோலா கம்பெனியை விஜய் வறுத்தெடுக்கும் டயலாக்கை போட்டு, கூடவே சில வருடங்களுக்கு முன் கோக் விளம்பரத்தில் விஜய்...
“கோக் குடிடா, ராப் வேணாம் டா கானாவிலே கலாய்க்கலாம்”
என்று ஆடிய ஆட்டத்தையும் போட்டு, 

‘அப்றம் விஜய், இது வேற வாயி, அது .....வாயா?’ என்று நறுக்கென கேட்டிருக்கிறார்கள். 
விஜய்யை வெச்சு செய்யும் இந்த மீம் வீடியோக்கள் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழியே, விஜய்யின் கவனத்துக்கும் போய்விட்டன. அதிர்ந்திருக்கிறார் மனிதர். 

என்ன இளைய தளபதி, ‘இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா?’ அப்படிங்கிற அதே அரத பழைய எஸ்கேப் டயலாக்கைதான் சொல்லப்போறீங்களா!