விமானத்தில் தமிழிசை செளந்தராஜனின் முன் வைத்து, பாஜக ஒழிக! என்று கோஷமிட்டடதற்காக,  சோஃபியா எனும் மாணவி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தற்போது கடும் சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தனிமனித கருத்து உரிமை கூட இல்லாமல் போய்விட்டதா இந்தியாவில் எனும் கேள்வியை இப்போது எழுப்பி இருக்கிறது இந்த சம்பவம். 

இதில் அந்த மாணவி மிகவும் நாகரீகமான முறையில் தான் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆனால் அவர் மீது கோபம் கொண்ட தமிழிசை அவரை கைது செய்து சிறையில் அடைப்பதில் வேகம் காட்டி இருக்கிறார்.
இதே வேகத்தை ஏன் எஸ்.வி.சேகர் வழக்கின் மீது அவர் காட்டவில்லை என்று தெரியவில்லை. 

ஒருவேளை அவருக்கு எஸ்.வி.சேகர் பெண் நிரூபர்கள் மீது உபயோகித்த வார்த்தைகள் தவறாக தெரியவில்லை போல , அதனால் தான் இன்னமும் கூட எஸ்.வி.சேகர் தண்டனைகள் எதுவும் அனுபவிக்காமல், சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கிறார் போல. என சமூக வலைதளங்களில் கேள்விகளால் துளைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த கேள்வியிலும் நியாயம் இருக்க தானே செய்கிறது. இதனால் தானோ என்னவோ இப்போது சோஃபியாவுக்கான ஆதரவுக்குரல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.


அதிலும் சோஃபியா மீது தமிழிசை ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும்? அவர் எதனால் வேக வேகமாக சோஃபியாவை சிறையில் அடைத்திட துடித்திருக்கிறார்? என்றும் இப்போது கேள்வி எழும்பி இருக்கிறது. அரசியல்வாதி என்று வரும் போது விமர்சனங்கள் சகஜம் தானே. அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் கூட இல்லாமல் போய்விட்டதே தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு. 


தன்னை விட வயதில் சிறிய பெண் தன் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததையே, இவரால் சகித்து கொள்ள முடியவில்லையே, தமிழகத்துக்கு மோடி வந்தபோது “GO BACK MODI” என்று கருப்பு சட்டையில் அவருக்கு எதிராக குரல் எழுப்பிய போது மட்டும் எப்படி அவற்றை சகித்து கொண்டார்? அத்தனை பேரையும் அப்போதே சிறையில் அடைத்திருக்கலாமே? என தாறுமாறாக தமிழிசைக்கு எதிராக கேள்வி எழுப்பி இருக்கின்றனர் மக்கள். 

ஒருவேளை இந்த இடத்தில் தமிழிசை சோஃபியாவிடம் பக்குவமாக பேச முயன்றிருந்தாலோ, அல்லது சோஃபியாவின் கருத்தை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தாலோ கூட இந்த விஷயம் இவ்வளவு பெரிதாகி இருக்காது. ஆனால் தமிழிசை எடுத்த அடுத்த கட்ட நடவடிக்கையான கைது நடவடிக்கை, இன்று சோஃபியாவின் குரலை தமிழகமெங்கும் ஒலிக்க செய்து தமிழிசைக்கு எதிராக இந்த சூழ்நிலையை மாற்றி இருக்கிறது.