கடந்த சில மாசத்துக்கு முன்னாடி, மெரீனாவுக்கு போன வீரமணி சும்மா இல்லாமல், அண்ணன் தம்பி மேட்டரில் தலையிடாமல் இருந்தாரா? வம்பாக அஞ்சா நெஞ்சனை உசுப்பி விட்டார். அவரு தான் பெரிய மனுஷனாச்சேன்னு விட்டாரா? மனுஷன் நெருப்பு மாதிரி கெளம்பிட்டாரு தரமா தாறுமாறா கிழிக்க, ஆனால் அவரது மகன் துரை தயாநிதி நீங்க இவருக்கு பதில் சொல்லாதீங்க, அவரைப்பத்தி ஒரே வார்த்தையிலே  நச்சுன்னு மூக்கை உடைக்கிற மாதிரியியும், காண்டுல இருக்குற எதிரிங்க கண்டமேனிக்கு கண்டம் பண்ற மாதிரி மேட்டர் இருக்கா என கேட்டதற்கு "ஓசி சோறுன்னு" ஒரே வார்த்தையில் சிக்கிவிட்டார் வீரமணி.

ஓசி சோறு மேட்டரில் வீரமணியை வெச்சு செஞ்சதில்,  உலக அளவில் ஒரு வாரத்திற்கு ட்ரெண்டில் இருந்தது. பாவம் கூகுளே ஓசி சோறுன்னா என்னன்னு கன்பியூஸ் ஆன சம்பவம் நடந்தது. 

அடுத்ததாக, சபரிமலை மேட்டரில், பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதில் பெண்கள் வீதிக்கு வந்து போராடவும் முன்வரவேண்டும். இது வெறும் மதப் பிரச்சினை மட்டுமல்ல தன்மானப்பிரச்சனை என ஐயப்பன் மேட்டரில் தர லோக்கலா இறங்கி விளையாடிய வீரமணி கடைசியாக 10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் - மாதவிடாய் காரணமாக - உள்ளே நுழைந்தால் தீட்டு - என்று ஒரு பொருந்தாக் காரணம் கூறப்படுகிறது! பழைய பத்தாம் பசலித்தனத்தை சமாதானப் போர்வை போர்த்தி மூடி மறைத்து ஐதீகம் பேசுவதில் அர்த்தம் இல்லை. மின்சார விளக்கு உள்ளே வந்துவிட்ட பிறகு, ஐதீகம் - சம்பிரதாயம் பேசுவதில் அர்த்தமுண்டா? என கேள்வியெழுப்பினார்.

ஆனால், பக்தர்களோ நீங்க கடவுள் நம்பிக்கையே இல்லன்னு சொல்றீங்க  உங்களுக்கு என்ன சபரிமலையில் வேலை? 

தனது கணவன் இயக்கத்தில், ஓரினச்சேர்க்கையாளர் படத்தில் நடித்தும், ஆபாச படங்களையும், மது குடிக்கும் படங்களையும் வெளியிட்ட ரெஹனா போன்ற பெண்ணுக்கு ஆதரவாக பேசுவதும், சபரிமலை பக்தர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கனும், சபரிமலை புனிதத்தை கெடுப்பதற்க்காக முயற்சிசெய்து அமைதியைக் குலைக்கும் விதமாக அட்டூழியங்கள் அரங்கேறின. அந்த நேரத்தில்  அட்டூழியம் செய்யும் அவர்களுக்கு ஆதரவான கருத்து சொல்வதும் என பிசியாகவே இருந்திருக்கிறார் வீரமணி . சபரிமைலைக்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம். ஜாதிக்கு அப்பாற்பட்டது சபரிமலை தான் என சொல்லுபவர்கள், கடவுள் இல்லைன்னு சொல்றவங்களுக்கு சபரிமலையில் என்ன வேலை?  என கிழித்தனர் வலைதள வாசிகள்.

இந்த மேட்டர் அடங்கி ஒரே ஒரு மாதம் ஆன நிலையில் இப்போ மாட்டு மூத்திர மேட்டரில் வம்பிழுத்துள்ளார். அதில், 'மாட்டு மூத்திர மகாத்மியம்'பற்றி அளந்து கொட்டுபவர்களுக்கு மரண அடி! கரியமில வாயுவைவிட அபாயகரமானது- 300 மடங்கு வெப்ப சலனத்துக்குக் காரணம் மாட்டு மூத்திரமே! பன்னாட்டு அறிவியல் அறிஞர்களின் ஆய்வு அறிக்கைகள் அம்பலம் என அறிக்கையே விட்டுள்ளார். இந்த அறிக்கையை பார்த்த பிஜேபி வீரமணியை தேர்தலுக்கு முன் தெறிக்கவிட ஸ்கெட்ச் போட்டு வருகிறது.