Asianet News TamilAsianet News Tamil

திமுகவில் புதைக்கப்படும் சமூக நீதி..! பட்டியல் வகுப்பு நிர்வாகிகளுக்கு உயர்பதவி வழங்காதது ஏன்..!???

கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றவர். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.

Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???
Author
Tamil Nadu, First Published Sep 10, 2020, 9:04 AM IST

திமுகவின் வரலாற்றில் அக்கட்சியின் முக்கிய பதவிகள் ஒரு முறை கூட பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது காலியாக இருந்த பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒன்று பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு  வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆ.ராசாவுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.திமுகவில் சமூகநீதி கொள்கை இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியவில்லை என்கிற கேள்வி பட்டியல் இன மக்களிடம் இருந்து அம்பு போல் திமுக வை நோக்கி பறந்துகொண்டிருக்கிறது.

Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???

திமுகவில் பட்டியல் இன கட்சி தொண்டர்கள் இதுவரைக்கு ஒன்றிய அளவிலான பதவிகளில் உட்கார முடியவில்லை.கீழ் மட்ட பதவியான கிளைச்செயலாளர்கள் வேண்டுமானால் இருக்கலாம்.மற்றபடி திமுக பட்டியல் இன மக்களை ஏமாற்றி.பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வர மட்டுமே நினைக்கிறது. சமூக நீதி என்பது திமுக புதைத்துவிட்டது. வெறும் வாய்வார்த்தைக்காக அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் பட்டியல் இன மக்களின் பிரதிநிதிகள்.

கடந்த 1949-ல் திமுக.வை அண்ணா தொடங்கிய போது முன்னணி தலைவர்களாக இருந்தவர்களில் ஒருவர் சத்தியவாணி முத்து. அவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். கட்சிக்காக கர்ப்பிணியாக இருந்த போதும் சிறை கொட்டடியை அனுபவித்தவர். அதனால் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ஆட்சியில் அமைச்சராகவும் உயர்ந்தார். அண்ணாவுக்கு பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்ட சத்தியவாணி முத்து, `தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்' என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் அதிமுக.வில் இணைந்தார். அவருக்கு எம்ஜிஆர் மத்திய அமைச்சர் பதவி வழங்கினார்.

Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???


கடந்த 1959 சென்னை மாநாகராட்சி தேர்தலில்தான் திமுக.வுக்கு அரசியலில் முதல் வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியை பெற்று தந்தவர்கள் ஒருங்கிணைந்த சென்னையின் மாவட்ட செயலாளர்களாக இருந்த ஏ.கே.சாமியும், இளம்பரிதியும். இருவரும் பட்டியல் வகுப்பை சேர்ந்த செல்வாக்கான தலைவர்கள். இந்த வெற்றி தந்த தன்னம்பிக்கையிலே அண்ணா, `ரிப்பன் கோட்டையை கைப்பற்றி விட்டோம். இன்னும் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றுவோம்'' என்றார்.

பட்டியல் வகுப்பினர் திமுக.வை ஆதரித்ததால் 1980-களில் தமிழகம் முழுவதும் வெல்ல முடிந்த எம்ஜிஆரால் சென்னையில் மட்டும் அவரால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. சென்னையில் திமுக.வின் தளபதிகளாக இருந்த ஏ.கே.சாமி, இளம்பரிதி, வை.பாலசுந்தரம் போன்ற ‌பட்டியல் வகுப்பினர் ஓரங்கட்டப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினர். அதன் பிறகே சென்னையில் திமுக தோல்வியை தழுவ தொடங்கியது.

Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???

குறிஞ்சிப்பாடி ராஜாங்கம், ஓ.பி.ராமன், டாக்டர் ராமகிருஷ்ணன் போன்ற பட்டியல் வகுப்பு தலைவர்களால் ஆட்சியில் அமைச்சர் பதவி பெற முடிந்தாலும், கட்சியில் பெரிய பொறுப்புக்கு வர முடியவில்லை. பொள்ளாச்சி பொதுத் தொகுதியில் வென்ற சி.டி.தண்டபாணி, முரசொலி மாறனை விட டெல்லியில் செல்வாக்காக இருந்தார். நாடாளுமன்ற துணைக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், முரசொலி மாறனுக்காக பலி கொடுக்கப்பட்டார்
கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றவர். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.

Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???

இதனால் பரிதி இளம்வழுதி வகித்த துணை பொதுச் செயலாளர் பதவி, மற்றொரு பட்டியல் வகுப்பில் அருந்ததியர் பிரிவை சேர்ந்த வி.பி.துரைசாமிக்கு வழங்கப்பட்டது. திமுக.வில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டிய வி.பி.துரைசாமி, 2-வது முறையாக அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜக.வில் இணைந்த அவருக்கு உடனடியாக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசி ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. பட்டியல் வகுப்பினருக்கு துணைபதவி என்பது இவர்கள் வைத்திருக்கும் பிராண்ட். துணை பதவிக்காக மட்டுமே பட்டியல் வகுப்பை சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஸ்டாலிக்கும் கொடி பிடிக்கிறார்கள். தன்மானம் உள்ளவர்கள் திமுகவின் முகத்திரையை கிழித்து விட்டு வெளியே வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கிளைச்செயலாளர்கள் பல ஆண்டுகளாக அதே பதவியில் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள்  ஒன்றிய பதவிகள் மாவட்ட பதவிகளுக்கு தலைமை மாற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டு வலுவாகவே இருக்கிறது.

Social justice buried in DMK ..! Why not give top rank to list class executives ..! ???


 இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சாதிய அரசியல் செய்யும் திமுக சமூக நீதி பேசி மாவட்டச்செயலாளர் பதவியை கீழ் நிலையில் இருக்கும் கிளைச்செயலாளருக்கு கொடுத்திருக்கலாமே.! சமூக நீதிக்குள் ஒளிந்துக்கொண்டு இருக்கும் திமுக முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருக்கிறது. 65 மாவட்ட செயலாளர்களைக் கொண்ட அக்கட்சியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கோடி தொண்டர்களை கொண்ட திமுகவில் ஜெயலலிதா போன்று அனைத்து தரப்பினருக்கும் அதிகாரம் மிக்க பதவிகளை வழங்குங்கள் அப்போது தான் மெஜாரிட்டியான வாக்காளர்கள் இருக்கும் தொகுதியில் கூட மைனாரிட்டி வேட்பாளர்களை அங்கே நிறுத்தி வெற்றி பெற வைக்க முடியும் என்கிற குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios