மறைந்த சோவின் உடலுக்கு முதலமைச்சர் ஓபிஎஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

பிரபல அரசியல் விமர்சகர் சோ மறைந்ததை அடுத்து அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பர் சோ என்பதால் அதிமுகவினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் முதல்வர் ஓபிஎஸ் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி,எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சோவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அதிமுகவினரும் அஞ்சலி செலுத்தினர்.
