தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 மற்றும் முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனோ மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2, 500 நிதியுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி சேலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர், மினி கிளினிக்கை தொடங்கி வைத்து பேசினார், அப்போது கோரோனோ மற்றும் புயாலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் நிதியாக ரூபாய் 2, 500 மற்றும் பொங்கல் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இத்திட்டம், ஜனவரி 4ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தங்களுக்கு இனிப்பாக அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.